Thursday, December 27, 2012

பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய பாதுகாப்பு

பரீட்சைகளின் இரகசியங்களைப் பாதுகாப்பதற்காகம் வகையில் மிக விரைவில் விசேட திட்டங்களை மேற்கொள்ள பரீட்சைத் திணைக்களம் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு. டப்ளியூ. எம். என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்ததுடன் இந்த புதிய செயற்திட்டத்திற்கு அமைய திணைக்களத்தில் தற்கோது காணப்படும் சிசிடீவி கமெராவை மேலும் உயர்ரக நிலைக்குட்படுத்தி எந்த வேளையிலும் உசார்நிலையில் வைக்கப்படுவதுடன் திணைக்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கமெராவை பெருத்துவதுடன் 24 மணிநேரமும் பதிவாகும் முறையில் கமெராவை செயற்படுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த புதிய செயற்திட்டத்தை அமுல்படுத்தும் போது இரகசிய அச்சகப் பிரிவில் உள்ளவர்கனளுக்கு எந்தப்பொருளையும் மறைத்துச் செல்ல முடியாதவாறு புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டார்

சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாப்பத்திரத்தை பரீட்சைத் திணைக்களம் வெளியிடுவதற்கு முன்னரே, வினாப்பத்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் வினாக்களை வெளியிட்டதாக்க் குறிப்பிடப்படும் இரகசிய அச்சகப் பிரிவைச் சேர்ந்த மங்கள முனசிங்க என்பவரின் சம்பளம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது பணிநிறுத்தம் செய்ப்பட்டுள்ள அவர் சம்பந்தப்பட்ட பல்வேறு விசாரணைகளை மேற்கொள்ள அவரை பணிநீக்கம் செய்வதற்கும் திணைக்களம் தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டார்.

பரீட்சைகளின் இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக மென்மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு. டப்ளியூ. எம். என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்ததுடன் இரகசிய அச்சகப் பிரிவினரின் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போனதால் இனி நம்பிக்கையை விட்டுவிட்டு சட்டத்திற்கமைய செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com