பிரதம நீதியரசருக்கு ஆதரவாக யாழ்.சட்டத்தரணிகள் மௌனப் பேரணி-படங்கள் இணைப்பு
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையைக் கண்டித்தும் பிரதம நீதியரசருக்கு ஆதரவாகவும் வடமாகாணச் சட்டத்தரணிகள் இன்று யாழ்ப்பாணத்தில் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இப்போராட்டத்தினால் நீதிமன்றப் பணிகள் யாவும் ஸ்தம்பித்தன.
இன்று காலை 11 மணிக்கு யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் முன்னால் கறுப்பு துணியால் வாயைக் கட்டிக்கொண்டு யாழ்.சுப்பிரமணியம் பூங்கா வளாகத்தை சுற்றி பேரணியாக வந்தனர்.
இதேவேளை வடமாகாண சட்டத்தரணிகள் பிரதம நீதியரசருக்கு ஆதரவாக நான்கு நாள் பணிப்புறக்கணிப்பிலும் ஏற்கனவே குதித்துள்ளனர்.
0 comments :
Post a Comment