Sunday, December 16, 2012

புதிய நீதியரசர் நியமிக்கப்பட்டால் ஏற்பதில்லை சட்டத்தரணிகள் சங்கத்தில் தீர்மானம்

புதிய நீதியரசர் ஒருவர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்று தீர்மானம் சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களில் அதுவும் ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குற்றப்பிரேரணையின் மூலமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு அவர் பதவிவிலக்கப்பட்டு புதிய ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் அவருக்கு உத்தியோகபூர்வமான வரவேற்பு அளிப்பதில்லை

அத்துடன்,பிரதம நீதியரசர் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கடந்த 11 ஆம் திகதி அறிவித்துள்ளார். அதன்பிரகாரம் குற்றப்பிரேரணையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.

மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்னரும் விசாரணைகள் தொடருமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல். ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment