டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியவுள்ளதாக மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளதோடு கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் இதனையும் நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில்,
உலகம் இன்று அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.
அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.
இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை.
இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment