இரத்த சோகையை குணமாக்கும் தக்காளி!!!
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காதக்காளி இரசம்நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.
பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
0 comments :
Post a Comment