Tuesday, December 18, 2012

ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் :தோல்வியை தழுவியது இலங்கை !!

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 450 ஓட்டங்களை எடுத்து டிக்ளே செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்களை எடுத்தது.இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரெலிய அணி 278 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இலங்கை அணிக்கு 393 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இலங்கை அணி 255 ஓட்டங்களை எடுத்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பத்டுஅன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com