Tuesday, December 11, 2012

பிரிட்டனில் தாதி தற்கொலை . மன்னிப்பு கோரியது அவுஸ்திரேலிய வானொலி.

பிரிட்டன் ரோயல் வைத்தியசாலை தாதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமது வானொலி நிகழ்ச்சியினால் ஏற்பட்ட ஒரு நிகழ்வென்பதனால் தாம் பெரிதும் கலையடைவதாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் ஊடகங்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சியொன்றுக்காக பிரிட்டிஸ் ரோயல் வைத்தியசாலை தாதியொருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கர்ப்பமுற்றுள்ள கேட் மிடில்டன் தொடர்பான தகவல்களை வினவியுள்ளனர்.

வானொலி நிகழ்ச்சிக்காக தகவல்களை கேட்பதாக தாதியை அறிவுறுத்தாமல், 2 வது எலிசபத் மகாராணியும் இளவரசர் சால்ஸ் சம் தொடர்பு கொள்வதாக கூறி இவவிரு அறிவிப்பாளர்களும் குறித்த தாதியை  தொடர்பு கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் டுடே எப்எம். வானொலியின் காலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களான மெல் கிரே மற்றும் மைக்கல் கிறிஸ்டியன் ஆகியோர்  இவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர். ஜெசிந்தா சல்தானா எனும் தாதி தனக்கு அரச குடும்பத்திலிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக தனது நண்பர்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பு அரச குடும்பத்திலிருந்த பெறப்படவில்லையென்றும், வானொலி நிகழ்ச்சிக்காகவே இவர்கள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தனது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட குறித்த தாதி மன உளைச்சல்  அடைந்துள்ளார்.

இதனால் 3 நாட்களுக்கு பின்னர் 46 வயதுடைய ஜசிந்தா எனும் தாதி ரோயல் வைத்தியசாலையில் வைத்து தற்கொலை செயது கொண்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வானொலி அதிகாரிகள் தற்போதைய எப்.எம்.அலைவரிசைகளின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு சமூக அனர்த்தங்கள ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.








1 comments :

Anonymous ,  December 11, 2012 at 7:58 PM  

How the Austrlian Radio fun makers
Made the life of the innocent nurse's
life as a tragedy story because of their hoax call to trick somebody by making them believe something that is not true.Who will be the next victim...?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com