இரசாயன பசளை இறக்குமதிக்கான நிதியை மீதப்படுத்த திட்டம்:பியசேன காமகே
புதிய கைத்தொழில்சாலைகளை நாடெங்கும் தாபிக்க நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதுடன்
இரசாயன பசளை இறக்குமதிக்காக செலவாகும் நிதியினை மீதப்படுத்த, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை உபகுழுவை தாபித்து நாட்டின் பசளை உற்பத்தி செய்ய முடியுமா என்பது குறித்து கண்டறியுமாறு பணிப்புரை வழங்கினார் என்றும் சபையில் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட எமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் விவசாயம், வனவளம் மற்றும் பொருளாதாரம்,அபிவிருத்தி, கைத்தொழில்,விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் பங்கேற்புடன் இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பொது திறைசேறியின் சீர்த்திருத்தங்களையும் உள்ளடக்கி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து நாட்டில் எதிர்காலத்தில் இரசாயன பசளையை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அறவீட்டினை எதிர்வரும் காலங்களில் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் விவசாயிகளிடமிருந்து உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சந்தைக்கு கிடைக்கும் போது நாம் விவசாயிகளின் நலன் கருதி இறக்குமதி மீதான வரியினை அதிகரிக்கின்றோம். இல்லாத பட்சத்தில் பாரிய பாதிப்புக்களை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உருளை கிழங்கிற்கு மாற்றமான விலைகள் காணப்படுகின்றன. நாம் இதற்கு முன்னர் 50 சதவீத வரியினை விதித்தோம். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகளுக்கு நிலையான விலை உருவாகின்றது.
இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உரையாடி எதிர்காலத்தில் உருளை கிழங்கின் விலையை குறைப்பதற்காக இதன் மீதான இறக்குமதி வரியினை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment