Wednesday, December 5, 2012

சிவப்பு மழை தொடர்பில் ஆய்வு நடத்தப்படவுள்ளது

நாட்டின் சில பிரதேசங்களில் அண்மையில் பொழிந்த சிவப்பு மழை தொடர்பில் மேலதிக ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் சந்திரா விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் செவனகல, மன்னம்பிட்டிய, ஹிக்குராங்கொட, மற்றும் பதியதலாவ பகுதிகளில் பெய்த சிவப்பு மழையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத உயிரின வகையொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment