யாழ்.பல்கலைக்கழக மாணவி மரணமான நிலையில் சடலமாக மீட்பு
யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீட மாணவியொருவர் மர்மமான முறையில் மரணமாகிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் நடராஜா சுஜானி வயது 21 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது தகப்பன் ஒரு உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்.
சுன்னாகத்திலுள்ள இவரது வீட்டில் தனிமையில் இருந்த இவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
One after the another,really what's happening to those poor girls.were they affected by depression...? or
due to any psychological torture.This type of tragedy stories should come an end.Inquiries and reports cannot be a solution for these sorrowful stories.Only the loving GOD knows .
Post a Comment