கடமைகளை அலட்சியப்படுத்திய பொலிஸார் நால்வருக்கு பணி இடைநிறுத்தம்
தங்களது உத்தியோகபூர்வக் கடமைகளை அலட்சியப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மூவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் தங்களது கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இவர்கள் உயர் மட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரினுடைய உறவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடன் அட்டை மோசடி தொடர்பான விசாரணையில் உயர் மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரினுடைய உறவினரின் பெயரை தவறுதலாக இவர்கள் சம்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை எனவும் வாக்குமூலங்களை தவறான முறையில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment