ஐரோப்பாவிற்கு சமாதான நோபல் பரிசா? எதிர்த்து நோர்வேயில் மாபெரும் ஆர்பாட்டங்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்குவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இதனையொட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அமெரிக்கா போன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் யுத்தத்திற்காக அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிக்காக குறித்த நோபல் பரிசினை வழங்குவதற்கு தீர்மானித்ததாக நோபல் சமாதான பரிசுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
படை பலத்தை பிரயோகித்து, அமைதியை நிலைநாட்டுவது நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்கான தகைமையல்லவென விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் நோபல் பரிசு பெற்றவரான பேராயர் பெஸ்மென் டுட்டு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் முக்கியமானவராக திகழ்கின்றார். இன்றைய தினம் ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் பெரும்பான்மையோரின் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் நோபல் சமாதான பரிசுக்கு சர்வதேச ரீதியில் நிலவும் கௌரவம் குறையுமென விமச்கர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment