Sunday, December 2, 2012

சுவிஸில் சோத்து பார்சலுக்கு ஏக பிரதிநிதிகளாகிய புலிகள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் சோத்துப்பார்சலுக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது. ஆரம்பத்தில் புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்தோரை சோத்துப்பார்சல் காரர் என்றும் அழைப்பர். அவர்களில் சிலர் இவ்வார்த்தை கேட்டு கடுப்பானதும், சிலர் நாங்கள் பசிக்கு சோறுதானே கேட்டோம் என்றதும், மக்கள் வன்னியிலிருந்து தடுப்பு முகாம்களில் அடைபட்டுக்கிடந்தபோது வாங்கிய பார்சல்கள் யாவற்றையும் கொடுத்துவிட்டோம் என்று இப்போது சொல்வதும் நான் கண்ட, கேட்ட விடயங்கள்.

ஆனால் தற்போது புதிய விடயம் ஒன்று தோன்றியுள்ளது. அதாவது தமிழீழ விடுதலை வேண்டி போராட புறப்பட்ட அமைப்பொன்றினை சோத்துப்பார்சல்காரர் என்று ஏளனம் செய்ய வித்திட்ட புலிகள் தற்போது சுவிஸில் சோத்துப்பார்சலுக்கு ஏக பிரதிநிதிகளாக முயன்றுள்ளனர். அதிசயமாக இருக்கும் அனால் உண்மை.

சுவிட்சர்லாந்திலே புலிகள் சோத்துப்பார்சல் விற்க தொடங்கியுள்ளனர். சோத்துப்பார்சல்களின் அதிபதியாக சுவிஸ் புலிகளின் முக்கியஸ்தர் அப்துல்லா வலம் வருகின்றார். சுவிஸ், சூரிச் மாநிலத்தில் உள்ள கடைக்காரர் யாவரும் தமது வேலையாட்களுக்கு அப்துல்லாவின் சோத்துப்பார்சல்களே வழங்கவேண்டுமாம். கடையில் வேலைசெய்கின்றவர்களுக்கு சோத்துப்பார்சல் கொடுத்து பின்னர் வீட்டில் உள்ள மனைவி பிள்ளையளுக்கும் கொடுத்து அதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் என்று சோத்துப்பார்சல் போராட்டத்தை சுவிஸ் முழுவதுமாக விஷ்தரிப்பதென்று திட்டமாம்.

அப்துல்லா புலிகளின் சுவிஸ் பணத்தின் பெரும்பகுதியினை சுருட்டிக்கொண்டு மறைந்தவர் என்று ஒரு சந்தர்ப்பத்தின் செய்திகள் வெளியாகியிருந்தது. பின்னர் அப்துல்லா அப்பணத்தில் வின்ரத்தூர் எனுமிடத்தில் விருந்தகம் ஒன்றை நடாத்துகின்றார் என்றும் கதைகள் வெளிவந்தன. இப்போது குறிப்பிட்ட விருந்தகத்திலிருந்தே சோத்துப்பார்சல்கள் விநியோகமாகின்றதாம்.

இந்த சோத்துப்பார்சல் விற்பனைத்திட்டத்திற்கு பின்னால் ஒரு கதையும் புனையப்பட்டுள்ளது. அக்கதைதான் சுவாரசியமானது. அதாவது அப்துல்லாவின் சோத்துப்பார்சலால் வரும் லாபத்தினை கொண்டு புலிகளுக்க கடன் வாங்கி கொடுத்தவர்களின் கடன்களை மீளச்செலுத்தப்போகின்றார்களாம். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பம் இலையிலையும் பால் வடியும் என்ற கதை ஞாபகம் வரும் என்று நினைக்கின்றன்.

யுத்தம் முடிவடைந்த தறுவாயில் அப்துல்லா பணத்துடன் புலிகளின் முன்னணியில் நின்ற ஒரு அம்மணியுடன் எஸ்கேப் ஆகிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் பணம் கொடுத்து நொந்து போய் நின்ற மனிதர் ஒருவர் ஒர் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அப்துல்லாவை சந்தித்துள்ளார். அவர் தான் அப்துல்லாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அப்துல்லா தனது சேட்டை கிளப்பி முதுகினை காட்டி இங்கே பாருங்கள் எனக்கு இந்தியன் ஆமி அடித்த தடம் இங்கிருக்கின்றது என்றாராம்.

இந்த அடிகாயத்தழும்பிற்கும் நான் தந்த பணத்திற்கும் என்ன சம்பந்தம் என பணத்தை திருப்பி கேட்ட நபர் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் ஒன்று பீப் அடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாரம் அப்துல்லா.

இந்தியன் ஆமி அடித்ததற்கு தமிழர் அப்துல்லாவிற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டுமா? இந்தியன் ஆமி அடித்திருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டினை இந்திய அரசிடம் அல்லவா பெற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இவ்விடயத்தில் நான் அப்துல்லா பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன். அதாவது இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு காரணம் இந்தியன் ஆமிக்கு புலிகள் அடித்தது. புலிகள் இந்தியன் ஆமிக்கு அடிப்பதற்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தது மக்கள். ஆகவே இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு மக்களே காரணம் எனவே அவர்களே நஷ்டஈடு வழங்கவேண்டும் என அப்துல்லா கருதியிருந்தால் நியாயமெல்லே.. ,

1 comment:

  1. இவ்விடத்தில் ஒரு உண்மையான நிலைமையை விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது சுவிஸ் வாழ் தமிழர்களில்
    படித்த, பண்பான, நாகரிகமான குடும்பங்களிலிருந்து வந்த தமிழர்களை விரல் விட்டு தான் எண்ண முடியும். அவர்களும் பலகாலமாக சுவிசில் வாழ நினைப்பதில்லை. எப்படியும் முயற்சி செய்து ஏதோ ஒரு ஆங்கில நாட்டிக்கு குடிபெயர்ந்து விடுவார்கள். எனவே சுவிஸ் வாழ் தமிழர்கள் என்றால் அறிவு, சிந்தனை, நடத்தைகள், வாழ்க்கை முறைகலில் எப்படிப்பட்டவர்கள் என்பதை மிகத் தெளிவாகவும், இலகுவாகவும் புரிந்து கொள்ளலாம்.
    எனவே சோத்து பார்சல், உண்டியல், ஊர்வலம், கொடிபிடிப்பு என்று தமிழர், தமிழீழம், தாயகம் என்று சுவிசில் நடக்கும் எந்த ஒரு காரியமும் வடி கட்டிய சுவிஸ் தமிழ் முட்டாள்களை ஏமாற்றி உழைக்கும் கள்ளர், காடையர்களின் கபடத்தனம் என்பதை இனியும் புரிந்து கொள்ளாவிடின் அடுத்த சுவிஸ் வாழ் தமிழ் சந்ததிக்கும் விடிவில்லை.
    எனவே இன்றே சிந்தித்து உங்கள் எதிகால வாழ்க்கையை நிர்ணயிப்பது மிகவும் நல்லது.

    ReplyDelete