தேசியக் கொடியை அவமதித்த ஜப்பானிய பிரஜை கைது- விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலங்கையின் தேசிய கொடியை அவமதித்ததான குற்றச்சாட்டில் ஜப்பானிய பிரஜையொருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய கொடியில் உள்ள சிங்கத்துக்கு பதிலாக பண்டா மிருகத்தின் புகைப்படம் பொருத்தப்பட்டிருந்த 167 தபால் முத்திரைகளுடன் மேற்படி ஜப்பானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கல்கிஸை பிரதான நீதவான் நிரோஷா பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment