Monday, December 17, 2012

ஜப்பானிய பிரதமர் தேர்தல் :அபே அமோக வெற்றி!!

ஜப்பானில் நடைபெற்ற பொது தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்.ஆளும் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் யோஷி ஹிகோ நோடா மீண்டும் போட்டியிட்ட இத்தேர்தலில் அவரை எதிர்த்து லிரபல் குடியரசு சார்பில் முன்னாள் பிரதமர் ஹின்சோ அபே (58) போட்டியிட்டார். நேற்று தேர்தல் நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் சுனாமி, நிலநடுக்கத்தினால், புகுஷிமா அணு உலைகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டதனால், மின் பற்றாக்குறை அதிகரித்தது. நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர தொடங்கின. 2030க்குள் அணு உலைகள் யாவற்றையும் படிப்படியாக மூடிவிடுவதற்கும், பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜப்பான் கடும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியிருந்ததால், ஆளும் கட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியிலிருந்தனர். இதையடுத்தே நேற்று நடைபெற்ற தேர்தலில், எதிர்க்கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற கீழ் சபையில் 3/2 இல் பெரும்பான்மையையும் பெற்றுள்ளது. மீண்டும் சின்ஷோ அபே அதிபராகியிருப்பது இந்தியாவுக்கு சாதகமானது என கூறப்படுகிறது.

எமது கட்சியின் மீதான நம்பிக்கையில் மக்கள் வாக்களிக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக ஆட்சி செய்த ஆளும் கட்சியினரின் செயற்பாடுகளினால் மக்கள் முழுவதுமாக விரக்தி அடைந்திருந்ததன் காரணமாகவே நமக்கு வாக்களித்திருப்பதாக அபே கருத்து கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com