மூன்று அம்சக் கோரிக்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணா விரதத்திற்கு அழைப்பு
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, காணாமல் போனோரைக் கண்டறிதல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், மாலை 4.30 வரை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 comments :
Medical journal says that dieting is good for health
Post a Comment