Friday, December 21, 2012

தமிழ் பேசவேண்டிய தூதரக அதிகாரி சிங்களம் பேசுகின்றார். சுவிஸ் மக்கள் விசனம்.

சுவிட்சர்லாந்துக்கான இலங்கைத் தூதரகம் ஜெனிவாவில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் பேசும் இலங்கையர்களின் கருமங்களை இலகுவாக்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் அதிகாரி தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் கருமங்களுக்காக தூதரகத்தை நாடுகின்ற தமிழ் மக்களிடம் சிங்களத்தில் உரையாடுவதாக சுவிட்சர்லாந்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பினை பேணுவதையோ அன்றில் அம்மக்கள் இலங்கை வந்து செல்வதையோ புலம்பெயர் புலிகள் விரும்புவதில்லை. இதற்காக புலிகள் பல்வேறுபட்ட பொய்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் இப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கும் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கும் இலங்கை அரசு தனது தூதரகங்கள் யாவற்றிலும் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமித்துள்ளது.

தொடர்பாடல்களினால் உருவாகக்கூடிய முரண்பாடுகள் அதிருப்திகளை தவிர்க்கும்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்நியமனங்கள் இரு தரப்பிடையேயுமான புரிந்துணர்வுகளுக்கு பெரிதும் உதவியுள்ளது என்ற கருத்துக்கள் நிலவுகின்ற நிலையிலேயே சுவிட்சர்லாந்தில் அதிகாரி ஒருவர் பொறுப்புணர்சி அற்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தவரான குறித்த அதிகாரியின் இச்செயற்பாடு குறித்து இரண்டு சந்தேகங்கள் எழுகின்றது.

ஓன்று – தூதரக அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் புரிந்துணர்வு ஏற்படுவதை எவ்வகையிலாவது தடுக்க புலிகள் முயற்சிக்கின்றனர். அதற்காக இவ்வதிகாரியை பணத்திற்கு வாங்கி மக்களை வெறுப்பூட்டுகின்ற செயலினை செய்ய துண்டியிருக்கலாம்.

இரண்டு – தமிழ் சிங்கள மக்கள் மோதியபோது பலவழிகளிலும் அரசியல் லாபம் ஈட்டிய இனமாக முஸ்லிம் இனம் உள்ளது என்பது யாவரும் மறுக்கமுடியாத உண்மை. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் - சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தால் தாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற நாடு சார்த்தது அல்லாத இனம் சார்ந்த சிந்தனையாக இருக்கலாம்.

No comments:

Post a Comment