பல்கலைக்கழக காவலாளிகளிடம் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விசாரணை
கடந்த 27ம்,28ம் திகதிகளில் பல்கலைக்கழக பிரதான வாயில்,விஞ்ஞான பீட வாயில், ஆண்கள் பெண்கள் விடுதி ஆகியவற்றில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரினால் 3 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக்கென பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் பணிமனையில் குற்றத்தடுப்பு பிரிவினரால் விபரம் கோரப்பட்டடது.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகமே அதற்கு பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்கலை நிர்வாகத்தின் அனுமதியுடன் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment