லயன் ஏயர் பயணிகளை தேடும் முயற்சி தோல்வி – பொலிஸ் பேச்சாளர்
14 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானப் பயணிகளின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இதுவரையில் எந்தவிதமான சடலங்களும் கண்டு பிடிக்கப்படவில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
கௌதாரிமுனைக் கடற்கரையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பயணிகளின் சடலங்களைத் தோண்டும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனையடுத்து அப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான் இந்த சடலங்களைத் மீட்கும் மூன்றாவது கட்ட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்
இதேவேளை, 'கடந்த 14 வருடங்களில் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடற்கரையின் நீளம் மற்றும் அகலத்தில் சுமார் 10 அடி தூரத்துக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
0 comments :
Post a Comment