இலங்கை, மாலைதீவுக்கு அதிகமான சீனர்கள்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிலங்கா வந்த சீனர்களின் எண்ணிக்கை 164 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தகவல் கூறுகிறது அதாவது கடந்த மாதத்தில் மட்டு 3353 சீனர்கள் இலங்கைக்கு வந்துள்ள அதேவேளை இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 46 சதவீத அதிகரிப்பாகும்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதுடன் இதில் குறிப்பிட்டவர்கள் இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்த சீனர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கடந்த 11 மாதங்களில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனர்களின் எண்ணிக்கையும் சுமார் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது அதாவது இந்தக் காலப்பகுதியில் மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட 866,000 வெளிநாட்டவர்களில், 24.8 வீதமானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment