Monday, December 3, 2012

ஈரானின் சொந்த தயாரிப்பில் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பு -வெள்ளோட்டமும் நிறைவு

பீட்டில்ஸ் இசைக்குழுவின் பாடல்களில், ஃபான்டஸி மஞ்சள் வர்ண நீர்மூழ்கிக் கப்பல் என்ற பாடல் ஒன்று உண்டு. 1960களில் ஹிட் அடித்த பாடல் அது. ஈரான் தற்போது அறிமுகம் செய்துள்ள நீர்மூழ்கிக் கப்பல், அந்த பாடல் கப்பலை விட தொழில்நுட்பம் அதிகமாக இருக்கலாம். ஆனால், அதே 'பளிச் கலர்' கன்செப்டில் உள்ளது.

இது ஃபான்டஸி மஞ்சள் அல்ல, கண்ணைப் பறிக்கும் நீல நிறம்!

நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே, கடலில் ரகசிய நடமாட்டங்களுக்கு பயன்படுவது. ஆனால், இவ்வளவு பளபள வர்ணத்தில் உலாவினால்;, சுலபமாக எதிகளின் கண்களுக்கு தெரிந்து விடுமே! ஏன் இப்படியொரு வர்ணத்தை தேர்ந்தெடுத்தார்கள்?

ஈரான் தமது புதிய நீர்மூழ்கிக் கப்பலை அண்மையில் , ஈரானிய அரசு டி.வி. சேனலில் அறிமுகம் செய்தது. காதிர் ரகத்திலான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர், 'சினா-7'


கடற்படை அதிகாரிகள் வழமையான வெள்ளை சீருடையில் இல்லாமல், பிளெயின் டார்க் சீருடையில் போஸ் கொடுக்கும் இந்த சினா-7 நீர்மூழ்கி கப்பலில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளதாக ஈரானே அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் கடற் பகுதியில் பன்தார் அபாஸில் இந்த நீர்மூழ்கிக் கப்பலை செலுத்தி சோதனை செய்துள்ளது ஈரான்.

முதல் கட்டமாக இரு நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அறிவித்தது ஈரான். தமது கடற் பகுதியில், தமது அனுமதி இல்லாமல் வரும் கப்பல்களை தாக்கி, மூழ்கடிப்பதற்காக இவை கடலில் விடப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்கள்;.

ஆனால், நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீர் மட்டத்துக்கு வந்தாலே சுலபமாக பார்வையில் படும் படியான வர்ணத்தில் உள்ளதே!

ஈரானிய கடற்படை பிரதான தளபதி ரியர் அட்மிரல் ஹபிபொல்லா சையாரி, 'எமது கடல் எல்லைகளை பாதுகாக்க, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் முதல் படிதான், இந்த நீர்மூழ்கிக் கப்பல். இதில் என்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன என்று மற்றைய நாடுகள் ஊகிக்கலாதே தவிர, உண்மையை அறிய முடியாது' என்றார் அரசு டி.வி. சேனலில் பேசியபோது.

பொதுவாகவே காதிர் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள், பெர்சியன் கல்ஃப் பகுதிகளின் ளாயடடழற றயவநசள பயணங்களுக்காகவே உருவாக்கப்படும் கப்பல்கள். அளவில் சிறியதாக இருந்தாலும், ஏவுகணை ஏவும்போது, பின்னுதைப்பு அதிகம் இல்லாத ரக கப்பல்கள் இவை.

ஆனால், அதன் வர்ணம்தான் கண்ணைக் குத்துகிறதே! அதற்கும்கூட ஒரு காரணம் இருக்கலாம்

இந்த வர்ணத்துக்கான காரணமாக சொல்லப்படுவது, ஈரான் வெளிப்படையாக காண்பித்துள்ள அந்த பளபள கப்பல், டம்மி என்பதே. அவர்களது நிஜமான சினா-7 கப்பல் வேறு என்றும், இதில் இருந்து வர்ணம் உட்பட பெரிதாக வேறுபட்டு இருக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

ஈரானுக்குள் வெளிநாட்டு உளவுத்துறை ஆட்கள் ஊடுருவுவது, இப்போதெல்லாம் மிகவும் சிரமமானது. எனவே மனித உளவுத் தகவல்களைவிட, சட்டலைட் உளவுத் தகவல்களையே அதிகம் நம்ப வேண்டிய நிலையில் மேலை நாட்டு உளவுத்துறைகள் உள்ளன. ஒரு சட்டலைட் மூலமாகவே, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்காவது கடல்மட்டத்தில் தென்படுகின்றதா என்று பார்க்க முடியும்.

இவர்களது பளபள வர்ண டம்மி கப்பல், சட்டலைட் படங்களில் தெளிவாக தெரியும். அது ஒரு லொகேஷனில் இருக்க, வழமையாக மங்கல் வர்ண நீர்மூழ்கிக் கப்பல் வேறு பகுதியில் நடமாடும் என்ற திட்டம் இது என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்!


No comments:

Post a Comment