நவாலியிலுள்ள ஆயுள்வேத வைத்தியர் வீட்டில் ஆயுத முனையில் கொள்ளை
நவாலியிலுள்ள தமிழ் ஆயுள் வேத வைத்தியர் ஒருவரது வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமுனையில் கொள்ளையிடப் பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்த இருவர் வைத்தியரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
0 comments :
Post a Comment