சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தமிழ், சிங்கள மொழிகளிலும் வெளியீடு
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான தெற்காசிய பிராந்திய நாடுகள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளதாகத் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் மிக முக்கியமான சட்டங்கள் இவ்வாறு இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட உள்ளது. இந்த மொழி பெயர்ப்பு பிரதிகள் எதிர்வரும் வாரமளவில் பிரசூரிக்கப்பட உள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் அளப்பரிய பணிகளை ஆற்றியிருந்ததும் இங்கு குறிப்பிட்டதக்கது.
0 comments :
Post a Comment