விவசாய அபிவிருத்திக்காக கனிசமான முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை!!
பயிர்ச் செய்கை ஊக்குவிப்புக்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. ஒரு ஹெக்டயரை விட கூடுதலாக செய்கைகளை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு தேவையான காணி, தொழில்நுட்ப அறிவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் வழங்கப்படவுள்ளன. வர்த்தக ரீதியிலான பயிர்ச் செய்கைக்காக இளைஞர்களை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
சம்பிரதாய விவசாயத்திற்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாய துறையில் புதிய யுகம் உருவாகுமென விவசாய அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விவசாய துறை சார்ந்த ஆராய்ச்சி பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பழச் செய்கையினை வர்த்தக ரீதியிலான பயிர்ச் செய்கையாக ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக விதை உற்பத்திக்காகவும் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சின்ன வெங்காயம், அவரை, உள்ளிட்ட விதை செய்கையினை விருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாய கிராம அபிவிருத்தி வேலைத்திடடங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.
0 comments :
Post a Comment