ஒரு மணி நேரப் பணிப் புறக் கணிப்பை கைவிட்டனர் யாழ்.வைத்தியர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஈ.என்.ரி வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன் இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதைக் கண்த்து யாழ்.வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த ஒரு மணித்தியாலயப் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.நிர்மலன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பி.ஜி மகிபால தலைமையிலான இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி பின்னர் வைத்தியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தாம் கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment