Tuesday, December 18, 2012

பாடசாலைக்கல்வி முடிந்ததும் வேலைவாய்ப்பாம்!!

பாடசாலையில் தகவல் தொழில்நுட்பவியல் பாடத்தை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் தேசிய வாழ்கைத்தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) வழங்க இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இன்று(18.12.2012) காலை கொழும்பில் உள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கேடபோர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி பாடசாலைகளில் உள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் நிலையங்களை பதிவு செய்வதுடன் அவற்றின் பாடநெறிகளை நற்சான்றுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதுடன் இச்செயற்பாட்டுக்கு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம்நலை வாழ்க்கைத்தொழிற் கல்வி மற்றும் பயிற்சி ஆணைக்குழு உதவிபுரியும் என குறிப்பிடப்பட்டதுடன் இதன்படி கல்விச் சான்றிதள்களுடன் (NVQ)சான்றிதழ் பெற்றுக்கொள்ளுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன,மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் க்ரேறோ ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.

No comments:

Post a Comment