குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு
வடமராட்சி கிழக்கு மணற்காடு கடலில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் குடத்தனையைச் சேர்ந்த அலோசியஸ் கஜின்ஸ் வயது 16 என்ற மாணவரே உயிர் இழந்தவராவார்.
கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் தீடிரென்று காணாமல் போயுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை தேடியும் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மதியம் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment