விக்டோரியா நீர்த்தேக்கதின் அணைக்கட்டிலுள்ள வான் கதவுகளில் இரண்டு வான்கதவுகள் இன்று தானாகவே திறந்துக்கொண்டதுடன் இந்த வான் கதவு ஒருவடத்திற்கு முன்னர் தானாகவே திறக்கப்பட்ட வான் கதவுகளே இவ்வாறு இன்று திங்கட்கிழமை மீண்டும் திறந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது இதனை அடுத்து இந்த நீர்த்தேகத்திலிருந்து நீர் பாய்ந்தோடும் ஆற்றங்கரையை அண்மித்த பகுதியிலுள்ளவர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
விக்டோரியா அணைக்கட்டில் நீர் நிரம்புகின்றபோது மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் வான் கதவுகள் தானாகவே திறந்துக்கொள்ளும் தொழில்நுட்பம் இந்த நீர்த்தேகத்தில் மட்டுமே இருக்கின்றமை விசேட அம்சமாகும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment