விசாரணையின் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேர் விடுதலை
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஏழு பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றிரவு விடுத்தலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பீட மாணவர்கள் 5 பேரும், விஞ்ஞான பீட மாணவர்கள் 2 பேருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
எனினும், முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்பீடம் ஆகிய மாணவர்கள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் துணைவேந்தருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment