இந்தியாவில் மஞ்சள் மழை மக்கள் தலைதெறிக்க ஓட்டம்
இந்தியாவில் மஞ்சள் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுவிருத்தகிரி குப்பம் கிராமத்திலேயே மஞ்சள் மழை பெய்துள்ளதாக உறுதிப் படுத்தப்படாத செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில் திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் விழ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்திலான மா போன்று காணப்பட்டது.
இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை , எம்பிலிபிட்டிய, சீய கனுவ கொடிகந்த பிரதேசத்திலும் மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ரு{ஹனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திளும மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்திருந்தன. அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப்படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கப்பட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.
அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.
இதுமட்டுமன்றி புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாகவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments :
Post a Comment