ஒரு வீட்டில் திருடப்பட்ட நகைகள் வொறொரு வீட்டில் சாமி தட்டிலிருந்து மீட்பு
ஒரு வீட்டில் திருட்டுப் போன ஆறு அரைப் பவுண் நகைகள் 24 மணி நேர இடைவெளிக்கு பிறகு பிறிதொரு வீட்டின் சாமித் தட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 04ம் திகதி பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது, இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிரந்த போது திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்நகைகள் மீட்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment