Sunday, December 2, 2012

ஒரு போக சாகுபடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளது என்றும், இதனால் விவசாயிகள் பயிருடுவதை ஒரு போகத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.தேனீ, கம்பம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி, கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி விவசாயம் செய்து வரும் தேனீ, கம்பம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயிகளை, தமிழக பொதுப்பணித்துறை ஒரு போகத்தோடு நிறுத்திக் கொள்ள சொல்லி, மறுமுறை நாற்றங்கால் பயிருடுவதை தடுத்து நிறுத்தி விட்டதாக தெரிகிறது. காரணம் முல்லைப் பெரியாறு அணையில் இருபோகத்துக்கு தேவையான நீர் இருப்பு இல்லை என்று கூறியுள்ளது. இதனால் தேனீ, கம்பம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment