சிரியா இராணுவத் தளபதி புரட்சிப் படையினருடன் இணைவு
சிரியா இராணுவ தளபதி ஒருவர், புரட்சி படையினருடன் இணைந்து உள்ளது பஷர் அல் அசாத் தலைமையிலான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 22 மாதங்களாக சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை பதவி விலகக் கோரி, புரட்சி படையினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசாத் பதவி விலக மறுத்ததால் புரட்சி படையினரை அங்கீகரித்து, அவர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது. இதனால் சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது.
கடந்த 22 மாதங்களில் 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், இரண்டு லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவை ஆதரிக்கின்றன. ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் பிடிவாத போக்கைக் கண்டித்து, துணை ஜனாதிபதி உள்ளிட்ட பலர் பதவி விலகி விட்டனர்.
இதற்கிடையே சிரியாவின் இராணுவத் தளபதி அல்-ஷலால், பதவி விலகி புரட்சி படையினருடன் கைகோர்த்துள்ளார்.
அவர் கூறுகையில், சிரியா இராணுவம் மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறி விட்டது என தெரிவித்து உள்ளார்
1 comments :
If you work for a man work for him and do not be a black sheep.It's really a shame of you.
Post a Comment