நீர்கொழும்பில் இத்தாலிய பிரஜையின் சடலம் மீட்பு
இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் ஸ்டபனில் (வயது 60) பிரஜை ஒருவரின் சடலத்தை நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்டுளதாக நீர்கொழும்பு ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.டி.சுனில் பெரேரா நேற்று(23.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்ட இந்நபர் இம்மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் நீர்கொழும்பு, ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் அயலவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் உயிரிழந்திருக்கலாம் எனவும் இது இயற்கை மரணமாக இருக்கலாம் என கருதுவதாகவும் பொலிஸார் தெரிவித்ததடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment