Tuesday, December 25, 2012

விண்வெளிச் சுற்றுலாவுக்கு விமானம் தயார்!

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் விசேட விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரிச்சர்ட் பிரான்சன் விமான நிறுவனம், மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்துள்ளதுடன் இதற்கான கட்டணம் தலா ரூ.1 கோடியே 10 லட்சம் என்றும் நிர்ணயித்ததையடுத்து ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர்.

இதனையடுத்து விண்வெளி சுற்றுலாவுக்காய புதிய விசேட விண்லகம் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் அதிவேக சக்தி கொண்ட 2 விமானிகள் உட்பட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்யகூடிய விண்வெளி விமானம் ஒன்றை தயாரித்தது.

இந்த புதிய விண்கலத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவ் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜார்ஜ் ஒயிட்சைட்ஸ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com