மாநகர சபையின் ஆறு கோடி வருமானத்தைக் கொள்ளையடித்த ஈ.பி.டி.பி- த.தே.கூ குற்றச்சாட்டு
யாழ்.மாநகர சபையின் ஆளும் கட்சியான ஈ.பி.டி.பி யினர் தற்காலிகக் கடைகள் என்ற போர்வையில் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமான மாநகர சபையின் வருமானத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளனர் என யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடாபி0ல் அவர்கள் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 70 இற்கும் அதிகமான தற்காலிகக் கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து பெறப்பட்ட வருமானங்கள் ஈ.பி.டி.பி யினரால் எந்த விதமான கணக்கும் ஒப்புவிக்கப்படால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகலரும் அறிவிக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment