கல்கிஸ்ச - கல்தேமுல்ல பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் கணவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிஸ்ச பிரதான நீதவான் நிரோஷா பெர்னாந்து நேற்று மாலை இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
சந்தேக நபர் நேற்று வழங்கிய வாக்கு மூலத்தினை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் தினம் சந்தேக நபர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின்படி தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்வதற்காகவே அவர் இந்த கொலைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
கழுத்து நெரிக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த கொலையை அவரது 3 வயது மகன் பார்த்ததனால், அவரையும் கழுத்து நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர் உறங்கி கொண்டிருந்த ஒரு மாத குழந்தைக்கு உள்ளிட்ட கொலை செய்யப்பட்ட இருவருக்கும் தீபற்றக்கூடிய அழகு சாதன திரவம் ஒன்றை ஊற்றி தீயிட்டுள்ளார்.
அவருடடைய காதலி என கூறப்படுவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 20 வயதான தேசிய பாடசாலையின் ஆசிரியராக கடமை புரிகிறார்.
இவரையும், காவல்துறையினர் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, சந்தேக நபர், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் சக கைதிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மூவரினதும் இறுதிக் கிரிகைகள் நேற்று ராவத்தாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment