Thursday, December 20, 2012

சந்தனமும் அதன் மருத்துவ பயனும்!

சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும்.உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது. கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும். சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும். நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர விந்து கெட்டியாகும். தீரும். சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com