பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழ விசாரணை அறிக்கையை ஜ.தே.க நிராகரிப்பு
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை ஐக்கிய தேசிய கட்சி நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி; நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவுக்குழு அங்கத்தவருமாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசருக்கு எதிரான இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு விடயத்தில் அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது.
எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் இன்றி விசாரணை அறிக்கையொன்றைத் தயாரித்து அதனை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதானது பக்கச் சார்பான விடயம் என்றார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், இவ் விசாரணையானது நீதியானதும் நியாயமானதுமாக நடத்தப்படவில்லை பிரதம நீதியரசர் மற்றும் நீதித்துறை மீதாக ஒருபக்க குற்றச்சாட்டுக்களைக் கொண்டே இந்த தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.
0 comments :
Post a Comment