சீரற்ற காலநிலையால் மலையக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு என்பவற்றினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் நானுஓயாவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஒய்ய மற்றும் இதல்கஸ்இன்ன ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதையில் கற்கள் வீழ்ந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment