சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இரும்புக்கம்பியால் தாக்குதல்.
தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு. தாக்கியவரும் பொலிஸாரும் ஒரே வைத்தியசாலையில்.
கிராந்துகோட்டை பிரதேசத்தில் இரவுநேர காவல் கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸாரை இரும்பு பொல்லால் தாக்கியும், கத்தியால் குத்தியும் காயம் ஏற்படுத்திய ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர் மஹியங்கனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு குறித்த இரண்டு பொலிஸாரும், நடமாடும் காவல் கடமையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், கடை ஒன்றின் அருகில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடாடியுள்ளார்.
இது தொடர்பில் அவரிடம் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்;ட போது, குறித்த கடை தமக்கு சொந்தமானது என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எனினும் அருகில் இருந்த காவலாளி ஒருவர், குறித்த கடை அவருக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர், இரும்பு கம்பியால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
அதுபோல் சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் பொலிஸ் அதிகாரிகளை குத்தவும் முற்பட்டுள்ளார்.
பின்னர், மோட்டர் சைக்கிளில் அவர் தப்ப முனைந்த வேளையில் ஒரு பொலிஸ் அதிகாரி, சந்தேக நபரின் காலுக்கு வெடி வைத்துள்ளார்.
காயமடைந்த நிலையில் சந்தேக நபர் மஹியங்கனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இரும்பு கம்பியால் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி எல் என் ஜீ குரேயின் பணிப்பின் பேரில் இடம்பெற்று வருகின்றன.
0 comments :
Post a Comment