Saturday, December 8, 2012

நிர்வாகம் கோரினால் பல்கலைக்கழக சூழலில் இருந்து பொலிஸாரை நீக்குவோம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னர், அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக சூழலில் பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாரை நீக்கக் கோரினால், பொலிஸாரை அங்கிருந்து நீக்குவோம் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பொன்றை நேற்றைய தினம் மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது.


பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை.

மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

பொலிஸார் தொலைவில் இருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். இந்த பாதுகாப்பு மாணவர்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படும் என்றார்./span>

1 comments :

Anonymous ,  December 8, 2012 at 9:20 PM  

Police protection is always needed to the university authorities in order to keep smooth and safety atmosphere,which also could prevent
unnecessary interferences,influnces of the outside trouble makers.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com