அமைச்சரே உம்மை நீரே பாதுகாத்துக் கொள்ளும்-ஆசிரியர் சங்கம்
2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சையின் விஞ்ஞான வினாப்பத்திரம் வெளியாகியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சு விசாரணை முடிவில் விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முதலே வெளியாகியது என்பதை ஏற்றுக்கொண்ட கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அனைவருக்கும் முதல் 19 வினாவுக்கும் 19 புள்ளிகள் வளங்கப்படும் எனகுறிப்பிட்டிருந்தார்.
கல்வி அமைச்சரின் இந்தப்பதிலுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்
தற்போது நடைபெற்று முடிந்த க.பொ.த. (சா/த) பரீட்சையின் விஞ்ஞான வினாப்பத்திரம் வெளியாகியது தொடர்பில் ஊடகங்களில் வந்தசெய்திகளாலேயே தெரிய வந்தது இது போன்று ஏனைய வினாப்பத்திரங்களும் வெளியாகவில்லை என்பதற்கு எந்தச் சான்றிதழை முன்வைக்க முடியும்? எனவே இந்தத்தவறை பொறுப்பேற்று கல்வியமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோர் கேட்டு பதவி விலகிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் யோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிமிடம் வரை கல்வி சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் தற்போது மேலெழுந்துள்ளதுடன், பரீட்சைகள் மீதிருந்த நம்பிக்கையும் முற்றாக விலகிப்போயுள்ளது என குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் கல்வியமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோர் தாமாக கேட்டு விலகி தமதுக்குள்ள நற்பெயரை பாதுகாக்க வேண்டும் அப்போது தான் கல்வியின் மீதும் பரீட்சைகள் மீதும் நம்பிக்கை வரும் என குறிப்பிட்டுள்ளார்.
கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சைக்கான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானமை நாட்டின் கல்வியை இருட்டுக்குள் தள்ளிவிடுகின்ற செயற்பாடாகும். கல்விச்செயற்பாடுகளுக்கும் பரீட்சை முறைமைகளுக்கும் முழுமையாக பொறுப்பு கூறவேண்டியவர் கல்வியமைச்சர் என்ற வகையில் அவர் பொறுப்பு கூறாது பரீட்சை வினாத்தாள்கள் வெளியானமை இது முதல் தடவையல்ல எனக்கூறி தப்பித்துக்கொள்வதற்கு முயற்சிக்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கச் தெரிவித்துள்ளது.
நாட்டின் கல்வித்துறையை வளர்த்து எடுக்க பாடுபடாது இருட்டுக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சிக்கும் கல்வியமைச்சர் பதவியிலிருந்து உடனடியான இராஜினாமா செய்யவேண்டும என தெரிவித்துள்ளது ஆசிரியர் சங்கம்.
0 comments :
Post a Comment