தெரிவுக் குழுவின் அறிக்கையை விசாரிக்க சுயாதீன குழுவை அமைக்க தயார் -ஜனாதிபதி அறிவிப்பு
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் தெரிவுக் குழவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கே சுயாதீன குழு நியமிக்க தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் புதிய பல்மாடி கட்டடத் தொகுதியை திறந்துவைத்து அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக ஒரு சுயாதீன குழுவை நியமிக்கவுள்ளேன்.
எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் எனது மனசாட்சிக்கு மட்டுமே நான் பதிலளிக்க வேண்டும். அது சரியானதாகவும் இருக்கவேண்டும்.
அதற்காகவே நான் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது. .இவ்வாறு செய்யவேண்டும் என்று புத்தகங்களிலோ அல்லது சட்டத்திலோ இல்லை என்றார்.
0 comments :
Post a Comment