மன்னாரில் மர்மவெடி பொருள் வெடித்ததில் மூவர் காயம்
மர்மப் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முருங்கன் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment