Thursday, December 20, 2012

படைப்பலத்தை வைத்துக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

படைப்பலத்தை வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்துள்ள கடற்றொழில்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண, அரசியல் ரீதியான அணுகுமுறைகள் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை எட்டமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் கடந்தவாரம் பூநகரி இரனைமாதா நகரில் கடலுணவு பதனிடல் நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் நிலவுகின்ற நீண்ட கால பிரச்சினைக்கு அரசியல் வழிமுறைகள் மூலமே நல்ல தீர்வினை காணவேண்டும்.

லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது அந்நாட்டு படைகளால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியை காப்பாற்ற முடியாமல்போனது.

இனவாதங்கள் பேசிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களையும் நாட்டினையும் அழிவுக்கு இட்டுச் செல்வது நல்லதல்ல.

நான் எப்பொழுதும் இனவாதத்தை முற்றாக எதிர்க்கின்றேன். அதுக்கு எதிராகவும் செயற்படுகின்றேன்.

இதன் காரணமாக சிங்கள மக்களுக்கு எதிராக நான் செயற்படுவதாக தெற்கிலுள்ள சிலர் கூறிவருக்கின்றனர். இருப்பினும் இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் குறித்து நான் அலட்டிக் கொள்வதில்லை.

அனைத்து மக்களும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment