பிரிட்டன் இளவரசியார் கேட் வில்லியம்ஸ் குழந்தை ஒன்றுக்குத் தாயாக உள்ளார் எனவும்
இதனால் முழு பிரிட்டன் அரச குடும்பமும் இளவரசியாரின் மிடில்டொன்ஸ் குடும்பமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டு இருப்பதாகவும் புனித ஜேம்ஸ் மாளிகையில் இருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது இவ்விடயம் குறித்து மாளிகை பேச்சாளர் ஒருவர் விரிவாகக் கூறுகையில், இளவரசியார் மூன்று மாத கர்ப்பம் தரித்துள்ளார்.
மேலும் இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை காலையில் சிறிது சுகயீனம் உற்றிருந்ததால் லண்டன் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ளதுடன் இன்னும் சில நாட்களுக்கு அவர் அங்கிருப்பார் எனவும் தெரிவித்தார்.
கேட் வில்லியம்ஸ் அல்லது இளவரசி கதெரீன் இற்குப் பிறக்கவுள்ள இக் குழந்தை எதிர்காலத்தில் இளவரசர் சார்லெஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரை அடுத்து சிங்காசனத்தைக் கைப்பற்றக் கூடிய உரிமையுடயது என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி கதெரீன் மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவருக்கும் வயது 30 என்பதுடன் ஏப்ரல் 2011 இல் வெஸ்ட்மின்ஸ்டெர் அப்பேயில் இருவருக்கும் திருமணம் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
இருவருக்கும் பிறக்கப்போகும் இம்முதலாவது குழந்தை இக் குழந்தை முடிக்கு உரியது என்பதுடன் வருங்காலத்தில் ஒரு படைத் தலைவராகவோ, இங்கிலாந்து தேவாலயத்தின் அதியுயர் ஆளுநராகவோ, பிரிட்டனின் மாநில தலைமை அதிகாரியாகவோ, அல்லது காமென்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 15 நாடுகளுடன் ஒரு உறுப்பினராகவோ வர வாய்ப்புக்கள் உள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட உலகின் பல முக்கிய நாடுகளில் இருந்து இளவரசர்கள் கேட் - வில்லியம்ஸ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
No comments:
Post a Comment