இலங்கை வான்பரப்பில் விண்கற்பொழிவு ஏற்படும்- விண்கற்களை பொது மக்கள் தொட வேண்டாம்
இலங்கையின் வான்பரப்பில் இந்த நாட்களில் விண்கற்கள் பொழிவினை காணலாம் என்று இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகாலை மற்றும் காலை நேரங்களில் விண்கற்கள் பொழிவதை தெளிவாக காணலாம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை ஆகாயத்திலிருந்து விழும் மர்மப் பொருட்களைத் தொட வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆகாயத்திலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும்.
ஆகாயத்திலிருந்து விழுகின்ற மர்மப் பொருட்களைக் காணுமிடத்து அவற்றை தொட வேண்டாம் அவ்வாறான மர்மப் பொருட்களை காணுமிடத்து பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்துக்கு அறிவியுங்கள்.
ஆகாயத்திலிருந்து விழும் மர்மப் பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தேசிய வானியல் ஆய்வாளரான பேராசிரியர் சந்திரா விக்கிரமதுங்கவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் தகவலறிந்தவர்கள், பொரளை மருத்துவ பரிசோதனை நிலைய தொலைபேசிய இலக்கமான 011 – 2693532 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.
0 comments :
Post a Comment