நாடாளுமன்ற தெரிவுக்குழு தன் மீது கண்ட குற்றங்களை எதிர்த்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவில் கேட்கப்பட்ட இடைக்கால நிவாரணம் பற்றிய தீர்ப்பை இன்று வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிபதிகள் மூவரைக்கொண்ட நீதிபதிகள் குழு தீர்மானித்தது..
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரித்த மனுவை மேன்முறையீட்டு பிரதம நீதிபதி எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையிலான அனில் குணரத்ன மற்றும் ஏ.டப்ளியு சலாம் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழுமம் மனுவை விசாரணைக்கு உட்படுத்தியபோதே இன்று தீர்ப்பை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த மனுமீதான இறுதித்தீர்ப்பு வரும்வரையிலும் இடைக்கால நிவாரணமாக நாடாளுமன்ற தெரிவிக்குழுவின் முடிவுகள் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
முறைப்பாட்டாளரான பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க குற்றப்பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு தெரிவுக்குழு தனக்கு போதிய கால அவகாசம் வழங்கவில்லை.
அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் தன்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள்.
அதுமட்டுமன்றி குற்றப்பிரேரணை செயன்முறைப்பற்றி தனக்கு ஏதும் கூறப்படவில்லை எனவும் சாட்சியங்களின் பட்டியல் தனக்கு தரப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment