Saturday, December 22, 2012

இரணைமடுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் மூன்று இஞ்சிக்கு இன்று (22.12.2012) பகல் 1.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர் தற்போது பெய்து வரும் மழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் 30 அடி அளிவில் உயர்ந்துள்ளதாலேயே குளத்தின் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே இரணைமடு குளத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் ஊரியான், மருதநகர், முரசுமோட்டை, சிவபுரம், நாகேந்திரபுரம், பரந்தன், உடுப்பாற்று கண்டல், ஐயன் கோயிலடி, தட்டுவன்கொட்டி, புதுக்குளம், பன்னங்கண்டி கோரக்கன் கட்டு ஆகிய ஊர்மக்களுக்கு இது தொடப்பில் ஒலிவாங்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன் தொடர்ந்து ஒரு கிழமைக்கு மழை நீடிக்கும் எனவே இன்னும் திறக்கப்படும் வான் கதவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment